நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கையின்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பண்டாரகம திறப்பனே, தெல்தெனிய, வத்தளை, ரக்குவானை, வவுனியா, பலங்கொட, மாத்தளை, மீஹலாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 76 பர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கம்பஹா மாவட்டத்தின் பூகொடை பிரதேசத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. ஒரு வெற்றுக்காணியில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் மேலதிகாரியொருவர் தெரிவித்தார். குறித்த காணி, பூகொடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் பின்னால் அமைந்துள்ளதாக அவர் எமது நிலையத்திற்கு அறிவித்தார். இதேவேளை பாராளுமன்ற நுழைவு வீதிக்கான வரைபடத்தை தம்வசம் வைத்திருந்த 27 நபர் ஒருவர் பலாங்கொட கிரிமட்டெதென்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்காக ஆறு அனுமதிப் பத்திரங்களையும் இவர் வைத்திருந்தார். ரி – 56 வகையைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கி ரவைகள், 13 சிம் அட்டைகள், டெப் கணனிகள், மூன்று கைத்தொலைபேசிகள், வங்கி அட்டை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனத்தின் கீழ் பகுதியில் நான்கு அங்குலம் கொண்ட தகடொன்று பொருத்தப்பட்டிருந்ததாக பொலிசார் அறிவித்திருக்கிறார்கள்.