கம்பெரலிய திட்டத்தின்கீழ் போரதீவுப்பற்று பிரதேச பிரிவிற்கு 97.50 மில்லியன் நிதி ஒதுக்கீடு



(ஷமி மண்டூர்)

பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தெரிவிப்பு

கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போரதிவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்காக 97.50 மில்லியன் நிதியினை போரதிவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் தேதிய கடதாசி கூட்டுத்தாபன தலைவரும் ஐக்கிய தேசியகட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் ஒதுக்கிடு செய்துள்ளதாக வெல்லாவெளி போரதிவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர் இராகுலநாயகி தெரிவித்துள்ளார்.

21 வீதிகள் கொங்கிறீட் இடுவதற்கு 42.00 மில்லியன், 03குளங்கள் புனரமைப்பதற்காக 09.00 மில்லின், 06பாடசாலைகளுக்கு மலசல கூடம் அமைப்பதற்காக 05.00 மிலிலியன், 01பாடசாலை விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்காக 02.00 மில்லியன் ரூபாவும், 03பொது விளையாட்டு மைதானம் புனரமைப்புக்காக 05.00 மில்லியனும், 20ஆலயங்கள் புனரமைப்புக்காக 19.50 மில்லியனும், 50 திருத்த வீடுகளுக்காக 15.00 மில்லியனும் மொத்தமாக 97.50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுளது.

இந்த பிரதேச செயலகப்பிரிவிற்கு முதல் தடவையாக கம்பெரலிய திட்டத்தின்கீழ் ஓதுக்கீடு செய்யப்பட்ட அதிகமான தொகை இதுவே என்பது குறிப்பிடதக்கது.