கசப்பான அனுபவங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து நிம்மதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வழிசெய்யும் புது வருடமாக அமைய வேண்டும் : அரச அதிபர்

மட்டக்களப்பு அரச அதிபர்  உதயகுமாரின்  புத்தாண்டு வாழ்த்து

 (சிஹாராலத்தீப்)

மலரவிருக்கும் விகாரி வருடத்தை மகிழ்ச்சிகரமாக வரவேற்பதுடன் இத் தமிழ் சிங்கள புத்தாண்டு எமது  மக்களின் கடந்த கால கசப்பான அனுப வங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து துன்ப துயரங்கள் நீங்கி நிம்மதியாக வும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வழிசெய்யும் புது வருடமாக அமைய வேண்டுமென இந்நன்னாளில் வல்லமை பொருந்திய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிப ருமான மாணிக்கம் உதயகுமார் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தியில்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-இப்புத்தாண்டு எமது மாவட்டத்தில் தனிநபர்களின் குடும்பவாழ்க்கைக்கு ஒளியூட்டுவதோடு, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய  நல் லுறவினைக்கட்டி எழுப்பவும் , புதிய முயற்சிகளையும்புதிய சிந்தனை களையும் கொண்டுவரும் நல்லாண்டாகவும் இப்புத்தாண்டு அமைய வேண்டும்.

இப்புத்தாண்டுஎமது உள்ளங்களிலும் இல்லங்களிலும்அக இருளை நீக்கி ஒளியேற்றுவதாகஅமைய பிராத்திப்பதுடன்இப்புத்தாண்டில் நமது பிரதே சம்,மாவட்டம்,மாகாணம் மற்றும் முழுநாட்டிலும் பல புதிய அபிவிருத்தி களைக்கொண்டுவரும்நல்லாண்டாகவும்அமையவேண்டும்

இந்நன்னாளில்அனைத்து மக்களுக்கும் மற்றும் எமது மாவட்டத்தின் சீரான நிருவாக சேவைக்கு என்னுடன் இணைந்து பங்களிப்புச்செய்து வரும் அனைத்து பணியாளர்கள்,சமூகசேவையாளர்கள், ஒத்துழைப்பு மிகுந்த  அரசியல் தலைமைத்துவங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறிப் பிட்டுள்ளார்.