தற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.

ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியே ஏனைய இடங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களின் தலைவராவார். அத்தோடு இவர் லண்டனில் பட்டத்தாரியும் அவுஸ்திரேலியாவில் முதுமானிப்பட்டத்தினையும் பெற்றவர் என்பதோடு வசதி படைத்தவராவார்.

இவர் தொடர்பான ஏனைய தகவல்களை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதுள்ளது. இது தொடர்பான துரித விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த தாக்குதல்தாரிகளுடன் வேறு ஏதேனும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பது குறித்தும் சர்வதேச தொடர்புகள் ஏதேனும் காணப்படுகின்ற என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன.

அத்தோடு இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பான விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பிலான சர்வதேச குழுக்களின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இது வரையில் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந் நிலையில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை இது தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய காணொளிகள் உள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

தற்கொலை குண்டுதாரியின் மனைவி வழங்கிய நேர்காணல் 

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன்   பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்