கல்லடி பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு



ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்காக ஒன்றினைவோம் எனும் தொணிப்பொருளில் இன்று முதல் எதிர் வரும் 12 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச பிரிவுகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டன

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி .என் .சத்தியானந்தி கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

கல்லடி பாலத்தின் அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோக நிகழ்வு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக காத்தான்குடி வரை நடைபெற்றது

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் எ எம் றியாஸ், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் எம் ஐ எம் .ஹாரீஸ், காத்தான்குடி ரகுமா பள்ளி வாசல் மௌலவி கே எல் எம் .அனீஸ் மற்றும் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இளைஞர்கள் கலந்துகொண்டனர்