இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

கொழும்பு உட்­பட நாட்­டி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்­புக்­க­ளை­ய­டுத்து நாட்­டி­லுள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளுக்கு பொலி­ஸாரும் படை­யி­னரும் பாது­காப்பு வழங்கி வரு­கின்­றனர். இதே­போன்று முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இந்து ஆல­யங்­களில் தொடர்ச்­சி­யான பூசை வழி­பா­டுகள் இடம்­பெ­று­வ­தனால் அங்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கி­றது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்­ம­கர்த்­தாக்கள் அர­சியல் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றனர்.

இந்த விடயம் தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­த­னவின் இணைப்புச் செய­லா­ள­ருடன் நேற்று கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் அதற்­கான ஏற்­பா­டு­களை அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி மேற்­கொள்­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் தமிழர் பணிக்குழுவின் தலைவருமான நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.