சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலய வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் நிகழ்வு


அன்சார்

சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அதிபரும் தலைவருமாகிய M.A.றகீம் அவர்களின் ஆலோசனையுடனும் ARSATHIANS’ CARNIVAL – அண்மையில் இடம் பெற்றது.

“My Breath My School” எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் இணைத்து பாடசாலையின் கல்வி மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளில் அவர்களின் பூரண பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நடாத்தப்பட்ட இந்நிகழ்விற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய ஜனாப். எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தெ.கி.பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தருமான கலாநிதி.எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களும் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிழ்வின் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட் அவர்களின் பங்குபற்றுதலோடு ஜலாலியா ஜும்மாப் பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பமான நடைபவணி பாடசாலைவரை தொடர்ந்தது அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

தேசியக் கொடி, கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி அவர்களாலும் பாடசாலைக் கொடி அதிபரும் பழைய மாணவர்கள் சங்க தலைவருமான எம்.ஏ.றகீம் அவர்களாலும் பழைய மாணவர்கள் சங்கக் கொடி அபிவிருத்தி உத்தியோகத்தரும் பழைய மாணவர்கள் சங்க உபதலைவருமான எச்.எம்.அக்றம் அவர்களாலும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை ஆராதணை மற்றும் அர்சத்தியன்ஸ் சத்தியப்பிரமாணம் ஆகிய தொடக்க நிகழ்வுகளுடன் அதிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பிணர்களின் பங்கு பற்றுதல்களுடன் மரநடுகையும், பகலிரவு கிரிகட்போட்டியும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதான அனுசரனையினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய ஜனாப். எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் இணை அனுசரனையினை கலாநிதி அன்வர் கே முஸ்தபா- ஸ்தாபகர் - CIMS கெம்பஸ், மக்கள் வங்கி சம்மாந்துறைக் கிளை மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களும் வழங்கியிருந்தார்கள். அவர்கள் அணைவருக்கும பழைய மாணவர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது

மேலும் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிருவாகத்ததை விரிவு படுத்தும் திட்டத்திற்கமைவாக இதுவரை அங்கத்துவத்திற்கான விண்ணப்பப்படிவம் சமர்ப்பித்த சகலரும் அமைப்பின் அங்கத்துவத்தைப் பொற்றுள்ளதுடன் அவர்கள் அனைவரும் எமது WhatsApp குழுமத்தில் விரைவில் இணைக்கப்படுவீர்கள். அத்தோடு ஒவ்வொரு கல்வியாண்டிலிருந்தும் ஒருவர் நிருவாகத்திற்கும் உள்வாங்கப்படுவீர்கள்.

இந்நிகழ்விற்கு சகல வழிகளிலும் அயராது உழைத்த, பழைய மாணர்கள் சங்கத்தின் தலைவர், உபதலைர், செயலாளர், பெருளாளர், தவிசாளர், நிருவாக உறுப்பிணர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கினறேன்.