சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

யூ.கே.காலித்தீன்

அமெரிக்க மனிதாபிமான நலன்புரி அமைப்பு திட்டத்தினால் நிறைவு செய்யப்பட்ட சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் இரண்டு மாடிக்கட்டடத்தை அமெரிக்க உயர் ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி. நிகழ்வானது சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு 12 வகுப்பறைகளைக் கட்டடங்களை அமெரிக்க உயர் ஸ்தானிகர் அலெய்னா பீ. பெட்லிற்ஸ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரினால் திறை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அமெரிக்க உயர் ஸ்தானிகர் தூதரகத்தின் அதிகாரிகள், கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள், ஊர்பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு அதிதிகளுக்கு பொன்னாடை நினைவுச்சின்னம் ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டன.