இன்று கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மிக முக்கியமான நாள்.


இன்று பெரிய வெள்ளியாகும். இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினமாகும்.

மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் நினைவுகூருவார்கள்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ அடியார்கள் இன்று விசேட ஆராதனைகளில் கலந்துகொண்டு யேசுவின் சிலுவை திருப்பாடுகளை நினைவுகூருவார்கள். அவர்கள் விரதமிருந்து வெள்ளை நிற ஆடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபடுவார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யேசு உயிர்த்தெழுந்த விதம் நினைவுகூரப்படும்.

கடவுளுக்காகவும் அயலவர்களுக்காகவும் சகலரையும் துறத்தல் என்பது கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரும் தியாகம் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இத்தகைய தியாகத்தின் மூலம் சிலுவை மரணத்தை யேசு பிரான் வென்ற விதத்தை சகலரும் கொண்டாட முடிவதாக பேராயர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார். எமது வாழ்க்கையின் சகல சவால்களினதும் முடிவில் நம்பிக்கை உள்ளது என்பதை யேசு பிரானின் வாழ்க்கை கற்றுத் தருவதாக பிரதமர் கூறியுள்ளர். ஒரு தனிநபராகவும், நாடு என்ற ரீதியிலும் சவால்களை எதிர்கொண்டு அவற்றை கொள்வதன் மூலம் சமூக நலன்களை ஏற்படுத்த சகலரும் முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.