மட்டு முயற்சியாண்மை கண்காட்சி நிகழ்வு




(லியோன்)

சிறிய தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்த “மட்டு முயற்சியாண்மை “கண்காட்சி 2019 நேற்று  மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு “மட்டு முயற்சியாண்மை “ 2019 எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்ற கண்காட்சியும் விற்பனையும்  நேற்று முதல் எதிர் வரும் ,20 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது .

மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் 14 பிரதேச பிரிவுகளிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்பு கைவினை பொருட்கள் ,உணவு உற்பத்திகள் ,சிற்பங்கள் ,மற்றும் கைத்தறி உற்பத்தி பொருட்கள் ,என பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்த பட்டுள்ளதுடன் விற்பனையும் செய்யப்பட்டன 
மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “மட்டு முயற்சியாண்மை “கண்காட்சி 2019 நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் , மாவட்ட செயலக உதவி மாட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் 14 பிரதேச பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்