கொத்மலை நீர்த்தேக்கத்தில் தெரியும் மதஸ்தலங்கள்




கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.

அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

1979 ஆம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியிருந்தன.

தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ள தால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.இவற்றைப் பார்வையிட பலர் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.