பெரியகல்லாறு பிரதமகுரு சிவஸ்ரீ மேகானந்தக் குருக்களுக்கு உணர்வுபூர்வமான பிரியாவிடை விழா



ரவிப்ரியா

பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக விநாகருக்கு நித்திய பூஜை செய்து திருத்தொண்டாற்றிய ஸ்தானகாச்சாரியார் பிரம்மஸ்ரீ சபா மேகானந்தக் குருக்கள் அவர்கள் தனது 71வது வயதில் தனது உடல் நிலை காரணமாகசுயமாக ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார். அன்னார்க்கு மேற்படி ஆலய பரிபாலன சபையினர் வண்ணக்கர் மூ.மன்மதராஜா தலைமையில்சனியன்று (13) மாலை உருக்கமான உணர்வுபூர்வமான பிரியாவிடை மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவை சிறப்பாகச் செய்தது.

இந் நிகழ்வில்; பெரியகல்லாறு ஆலயங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகாகள் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு அவரின்விசேட குணங்களை அடையாளப்படுத்தி உரையாற்றி அன்னாருக்கு ஏகோபித்த மகிமையும் பெருமையும் சேர்த்தனர்.

ஆலய கணக்குப்பிள்ளை என்.கமல்ராஜ் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்க, ஓய்வு நிலை ஆசிரியர் நாகப்பன் தேவாரம் இசைக்கமுன்னாள் கணக்குப்பிள்ளை த.தவராசா வரவேற்பரை நிகழ்த்த தலைவர் ஆரம்ப உரையடன் நிகழ்வு ஆரம்பமானது.;

தலைவர் தனது ஆரம்ப உரையில் அலயத்தின் வரலாற்றில் தொடர்ச்சியாக மிக நீண்டகாலமான 17 வருடங்களை பிள்ளையாருக்குஅர்ப்பணித்து காசு ஆசையின்றி செயற்பட்ட ஒரே குரு மேகானந்தக் குருக்கள்தான் என புகழாரம் சூட்டினார். பெரியகல்லாற்றில் இருக்கும்இரு பிராமண குடும்பங்களில் ஒன்றிலிருந்து தனது தந்தைக்குப் பின் பணி செய்ய வந்த ஐயா அவர்கள் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிஅனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்

புல குருக்கள்மார் அவ்வப்போது இவ்வாலயத்தில் பணிபுரிந்தபோதும் அவர்கள் இடையில் ஆலயத்தை விட்டுச் சென்றவர்களாவோஅல்லது நிர்வாகத்தால் விலக்கப்படடவர்களாகவோ இருந்தார்கள். அவர்கள் அனைவருமே உழைப்பில் கண்ணாக இருந்துசெயற்பட்டவர்கள். ஐயா அவர்களோ நேரம் தவறாமல் பூஜைகளை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துசெயற்பட்டவர்

.ஆனால் எமது பிரதமகுரு. தனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு சுயமாக ஓய்வு பெறுவதற்கு விரும்பியவர். ஆதனால் நாங்கள் மிகவும்கவலையுடன் அவர் விருப்பத்தை ஏற்றுக் கொண்டோம்.

எனினும் அவரின் மேலதிக சிசிச்சைக்காக ஆலயம் சார்பாக ஒரு இலட்சம் ரூபாவையும், தனது சொந்த நன்கொடையாக ரூபாஐம்பதாயிரத்தையும், அதேபோல் கணக்குப்பிள்ளை கமல்ராஜ்ம் ருபா இருபத்தையாயிரத்தையும் இன்று வழங்கி வைக்கின்றோம்.

அவர் சிகிச்சை பெற்று பூரண சுகத்துடன் வந்து, தான் மீண்டும் பணி செய்ய விரும்புகின்றேன் எனக் கூறினால் அதற்கு நாம் நிச்சயமாக அனுமதியளிப்போம் என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பல பிரமுகர்களும் உரையாற்றினர். அனைவரின் உரையிலும் அடிநாதமாக அமைந்தது காசுக்கு ஆசைப்படாத அதற்குஅடிமையாகாத பூஜையிலும் கிரியைகளிலும் மட்டும் புலன் செலுத்துகின்ற அக்கறை காட்டுகின்ற பக்தி மார்க்கம் தவறாத. பண்புகள்அனைத்தும் நிறைந்த சிறந்த ஒழுக்க சீலர் என்பதேயாகும். இறுதியாக பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கி நிகழவுநிறைவடைந்தது. சபையோரும் இயன்ற நன்கொடைகளை வழங்கி அவரின் ஏற்புரையுடன் வழியனுப்பி வைத்தனர்.

ஆலய குரு ஒருவருக்கு பெரியகல்லாறு கிராமம் அளித்த நன்றியுணர்வுடன கூடிய மிகப் பெரிய கௌரவமாகவும் ஆக்கபூர்வமானதாகவும்மிகவும் பொருத்தப்பாடுடையதாகவும்; இந் நிகழ்வு அமைந்ததை பிரதமகுரு தம்பதிகளின் முகமலர்ச்சி வெளிப்படுத்தியது.