ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்



2020ஆம் ஆண்டாகும்போது 2,000 ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உத்தேசித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தொழில் முயற்சியாளர்களைத் தௌிவூட்டும் செயற்றிட்டமொன்றை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சந்தையை வெற்றிகொண்ட வர்த்தகர்கள், ஏற்றுமதித் துறையில் முன்னிற்கும் நிறுவனங்கள், காப்புறுதி வங்கி உள்ளிட்ட விடயத்துக்கு பொறுப்பான நிறுவனங்களின் அதிகாரிகளினால் தொழில் முயற்சியாளர்கள் தௌிவுபடுத்தப்படவுள்ளனர்.