அர­சி­ய­லுக்கு வர­மாட்­டேன்- சங்­க­கார ! அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க ரணில் பொருத்­த­மா­ன­வர்



சஜித் பிரே­ம­தா­ச­வு­டன் பொது நிகழ்­வில் சங்­க­காரா பங்­கேற்­றி­ருந்­த­போ­தும், அர­சி­ய­லுக்­குள்பிர­வே­சிக்­கும் எண்­ணம் தனக்கு இல்லை என்று குறிப்­பிட்­டார்.

‘ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பொது வேட்­பா­ள­ராக தங்­க­ளின் (சங்­க­கார) பெயர் குறிப்­பி­டப்­பட்­டது. நீங்­கள் அர­சி­ய­லுக்கு வர­மாட்­டேன் என்று கூறி­யி­ருந்­தீர்­கள். இப்­போது சஜித் பிரே­ம­தா­ச­வு­டன் வந்­தி­ருக்­கின்­றீர்­கள். அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் சஜித்­துக்­கும் கட்­சிக்­கும் கருத்து முரண்­பாடு நில­வு­கின்­றது.

இது தொடர்­பில் என்ன கூறு­கின்­றீர்­கள்?’ என்று சங்­கா­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

‘கட்சி முரண்­பாடு தொடர்­பில் நான் பதி­ல­ளிக்க விரும்­ப­வில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க ரணில் பொருத்­த­மா­ன­வர். இதை நான் சொல்­வ­தால் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆத­ர­வா­ளன் என்று நினைக்­க­வேண்­டாம். நான் பொது­ம­க­னா­கவே கூறு­கின்­றேன்’ என்­றார்.