ஐ.எஸ் அமைப்பின் இலங்கைக்கான தலைவராக செயற்பட்ட காத்தான்குடியை சேர்ந்த தற்கொலைதாரி ஸஹ்ரான் காசிம்



ஐ.எஸ். அமைப்பின் இலங்கைக்கான தலைவராக செயற்பட்ட   காத்தான்குடியை சேர்ந்த தற்கொலைதாரி  மௌலவி ஸஹ்ரான் காசிம்


   

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை படுகொலை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக காத்தான்குடியை சேர்ந்த மௌலவி ஸஹ்ரான் காசிம்  செயற்பட்டுள்ளார் அத்துடன் இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினால் பயிற்றப்பட்ட ஒரு தீவிரவாதி எனவும் அவர்களோடு சேர்ந்து மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக நடைபெற்ற போரிலும் ஒரு போராளியாக பங்குகொண்டுள்ளார்.
அத்தோடு இவர் இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) அமைப்பின்
 ( ISIS இன்  இலங்கைக்கு உரிய அமைப்பாக)  முக்கிய செயற்பாட்டாளராகவும்    தலைவராகவும் இயங்கி   இலங்கையில் பல முஸ்லிம் இளைஞர்களை  உள்வாங்கி இப்பெரும் பயங்கரவாத படுகொலையை மேற்கொண்டுள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது ( Skynews, Reuters, Telegraph )

இந்த விடயம் சம்பந்தாமாக நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய  ஊடகவியாளர் மாநாட்டில் சர்வதேச ஊடகவியாளார்களின் கேள்விகளுக்கு பிரதமர்  பதிலளிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதிலும் இந்த விடயத்தை உறுதிபடுத்தியது போல் தெரிகிறது .
மேலும் அவர் தெரிவிக்கையில்

காசிம் ஒரு தற்கொலை குண்டுதாரி எனவும் அவருக்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருந்து இருக்காலாம் என்றும் அத்தோடு காசிம் வெளிநாடு சென்று அமைப்பிற்காக 2015 இருந்து ஐ.எஸ். அமைப்பு நடத்திய போரில் பங்கு கொண்டு இருக்கலாம் என்றும் குறிபிட்டுள்ளார் 

மேலும் சர்வதேச ஊடகவியாளரின் மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தன்னுடைய கருத்தின் படி
இன்னும் பல குண்டுதாரிகள் இருக்காலம் எனவும் அத்தோடு மேலும் பல வெடிகுண்டுகள் மீட்கப்படாமல் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்