2019 வாக்காளர் பதிவு விண்ணப்ப விநியோகம் இன்று முதல்

இந்த வருடத்தில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் சேகரிக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, குறித்த விண்ணப்படிவத்துடன், மற்றுமொரு விண்ணப்பப்படிவமும் விநியோகிக்கப்படும் எனவும், தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

16 வயது முதல் 18 வயது வரையானோரின் பெயர் விபரங்களை குறித்த விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகளின் விபரங்களும் குறித்த விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய சரியான விபரங்கள் இல்லாமை காரணமாக, தேர்தல்கள் செயலகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.