வவுணதீவு பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்ற இருவர் கைது.





மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் மிருக வதைச் சட்டத்தை மீறி மாடுகளை ​லொறியொன்றில் ஏற்றிச்சென்றபோது குறித்த வாகனத்துடன் சந்தேகநபர் இருவரை பொலிஸார் வௌ்ளிக்கிழமை(24) காலை 9.32 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

ஆயித்தியமலை பிரதேசத்திலிருந்து மணற்பிட்டி ஊடாக கல்முனை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றில் 10 மாடுகளை சித்திரவதைக்குள்ளாக்கியும், சட்டதிட்டங்களை மீறியும் ஏற்றிச் சென்றதனால் குறித்த வாகனத்தையும் அதன் சாரதி உள்ளிட்ட இருவரையும் வவுணதீவு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த மாடுகளை கொண்டு செல்வதற்கு அனுமதிப் பத்திரம் இருந்தபோதிலும், அதனை கொண்டு சென்ற முறை சட்டத்திற்கு எதிரானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட மாடுகளை வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.