கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவின் போது சந்தேகத்தின் பேரில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் பொலிசாரால் கைது


(க. விஜயரெத்தினம்)

துறைநீலாவணையில் இளைஞர் ஒருவர்  கைது செய்யப்படு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பீ.பீ.எஸ்.சரச்சந்திர தெரிவித்தார்.

இச்சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் சனிக்கிழமை(19)இரவு 7.30 மணியளவில் நடைபெற்றது.

துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தில் தற்போது வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.

இதன்போது அடியார்கள் துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தூக்கு காவடியெடுத்து பிரதான வீதியூடாக இரவு 7.30 மணியளவில் வலம்வந்தார்கள்.இவ்நிகழ்வின்போது அடியார்களோடு அடியாராக நடமாடிய கல்முனைக்குடியை சேர்ந்த எஸ்.எம்.றில்வான்(வயது 21)என்பவர் வந்து கொண்டிருந்தார்.இளைஞர்களுக்கு அச்சம் ஏற்பட்டு விசாரித்துள்ளார்கள்.இதன்போது சந்தேகநபர் சந்தேகத்தில் ஓடியுள்ளார்.சந்தேகத்தில் ஓடிய நபரைப் பிடித்து வைத்த பொதுமக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு தெவித்தார்கள்.

விரைந்து வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பீ.பீ.எஸ்.சரச்சந்திர சந்தேக நபரை பிடித்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.இவரிடம் கைவிரல் அடையாளம் பெறப்பட்ட பின்பு இன்று ஞாயிற்றுக்கிழமை(19)1.00 மணியளவில் சந்தேகநபரை விடுதலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

நாட்டில் நிலவுகின்ற அச்சம் காரணமாக பொதுமக்கள்,இளைஞர்கள் இரவுவேளையில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலிசார் குறிப்பிடுகின்றார்கள்.