கண்ணகியின் புகழ்பாட வந்தோம் ஆன்மீக இசை பேழைவெளியீட்டு விழா




(க.விஜயரெத்தினம்)

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் சிறப்பைக்கூறும் "கண்ணகியின் புகழ்பாட வந்தோம்" ஆன்மீக இசை பேழைவெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(12.5.2019)காலை 10.30 மணியளவில் ஆரையம்பதி இராமகிருஷ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடன கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி க.மோகனதாஸன்,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்செல்வன் ,மதகுருமார்,ஆலய பரிபாலன சபைத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது இறுவெட்டுக்களை முதன்மை அதிதிகள் வெளியீட்டு வைத்துள்ளார்கள்.இந்த இசைப்பேழை இறுவெட்டானது ஆரையம்பதியை சேர்ந்த சி.ரஞ்சித்குமாரின் தயாரிப்பிலும், ஆரையம்பதியை சேர்ந்த ராஜன் யோகநாதன், தர்மரெட்ணம் மற்றும் ச.ரகுதாஸ் ஆகியோரின் ஏற்பாட்டிலும் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கண்ணகியம்மனின் சிறப்புக்களை ஆரையம்பதியைச் சேர்ந்த சக்திஸ்ரீ வி.பரிபூராணந்த முதலியார் மற்றும் சோ.பிரசாந் ஆகியோர்கள் பாடல்வரிகளை கோர்ப்புச் செய்துள்ளார்கள்.இதன்போது கண்ணகித்தாயின் சிறப்புக்கள் அடங்கிய 5பாடல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.இதன்போது ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலய பிரதம பூசகர் முதன்மை அதிதிகளால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.