அமிழா'திரு - வினாத் தொகுப்புக் கையேடு வெளியீடு

                                                                                    (சித்தா)
கடந்த வருட பரீட்சை முடிவின் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயமானது தேசிய ரீதியில் 83 ஆவது இடத்தினை பெற்றிருந்தது. இந்நிலையினை மாற்றியமைத்து முன்னிலைக்கு வலயத்தினைக் கொண்டு வரும் நோக்கில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந. புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலில்; மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான துரித செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் க.பொ.த.(சா.த) மாணவர்களின் கணித பாடத்தின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கணித பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.கா.ஜெயமோகன் அவர்களினால் எழுதப்பட்ட அமிழா'திரு க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான அத்தியாவசியக் கற்றல் எண்ணக்கருக்களை முதன்மைப்படுத்திய வினாத் தொகுப்புக் கையேடு இன்று (17.05.2019) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பட்டிருப்பு வலயத்தின் கணித பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜீ.அன்னநவபாரதி தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் கலந்து சிறப்பித்தார். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.எஸ்.நேசகஜேந்திரன், திரு.த.நடேசமூர்த்தி, மற்றும் ஓய்வு நிலை கணித பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.சி.கிருஸ்ணபிள்ளை ஆகியோருடன் அனுசரணையாளர்களும் கணித பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டு வெளியீட்டினைச் சிறப்பித்தனர். 
அமிழா'திரு க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான அத்தியாவசியக் கற்றல் எண்ணக்கருக்களை முதன்மைப்படுத்திய வினாத் தொகுப்புக் கையேட்டுக்காக களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்றச் சங்கம்(பிரித்தானியா) மற்றும் காசிப்பிள்ளை நலிவுற்றோருக்கான நலன்புரி அமைப்பு (பிரித்தானியா) போன்ற அமைப்புகள் அனுசரணையினை வழங்கியிருந்தனர்.