எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை - இராணுவத் தளபதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி இலங்கைக்கு தேலையில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா ருடே தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய இராணுவ தளபதி வேறு எந்த நாட்டினதும் படைகள் இலங்கைக்கு வருவதை நாம் ஒருபோதும் உற்சாகப்படுத்துவதில்லை.

நமக்கு தேவைப்படுவது விசாரணைகளுக்கான உதவியும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தொழிநுட்ப உதவிகளுமே ஆகும். எமக்கு அவசியமாக தேவைப்படுகின்ற நேரத்தில் உதவ முன்வருகின்ற உண்மையான நண்பர்களை நாம் வரவேற்போம். இந்திய இராணுவத்துடனான எமது உறவுகளும் அயல் நாடுகளுடனான குறிப்பாக இந்தியாவுடனான இராணுவ இராஜதந்திரமும் சிறப்பான நிலையிலேயே இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.