பிரசித்தி பெற்ற ஆரையம்பதி கண்ணகையம்மன் சடங்கு

(சாரங்கன்)
ஈழத்தின் கிழக்கே,  தமிழும் சைவமும் தழைத்தோங்கி அட்டதிக்கும் அருட்பதிகள்  நிறைந்து, ஆயகலை அறுபத்து நான்கோடு அனைத்து வளங்களும் குன்றாது குறையாது , ஆத்மீக புப்புத்து எட்டுத்திக்கும் பரப்பி குருகுலத்தோர் கூடி வாழ,  மாதரச உலக நாச்சியின் கோலோதேட்சிய மண்ணேறு முனைவிட்டு, ஆதிபராசக்தி ஆயிரம் கண்ணுடைய கற்பரசி கண்ணகை அம்பாள் பொற்புடன் பேழைதனிலே, பன்னெடுங்காலம் கோயில் கொண்டு அமர்ந்து அருள்மழை பொழிந்து நன்நகராம் ஆரைநகர் காத்தருளும் அன்னையின் ஆலய வருடாந்த சடங்கு 
நிகழும் விகாரி வருடம் சித்திரைத்திங்கள் 28 ஆம் நாள் 11.05.2019 சனிக்கிழமை முன்னிரவு 7.00 க்கு திருக்கதவு திறந்துவைகாசி திங்கள் 4 ஆம் நாள் (18.05.2019) சனிக்கிழமை பௌர்ணமித்  திதியும விசா க நட்சத்திரமும் பரிகம் யோகமும் கூடிய இரவு 11.00 மணிக்கு திருக்குளிர்த்தியும் இடம்பெறும்.

11.05.2019  (சனிக்கிழமை) இரவு திருக்கதவு திறத்தலும் அம்மனை அழைத்து வருதலும்
15.05.2019 (புதன்கிழமை) இரவு கல்யாண கால் வெட்டுதல் மற்றும்  கூறைதாலி வைபவம்
16.05.2019 (வியாழக்கிழமை) அதிகாலை திருக்கல்யாணச் சடங்கு
17.05.2019 (வெள்ளிக்கிழமை) அதிகாலை கப்பல்காரர் சடங்கு
18.05.2019 (சனிக்கிழமை) அதிகாலை பச்சை கட்டி சடங்கு
18.05.2019 (சனிக்கிழமை) நள்ளிரவு திருக்குளிர்த்தி 
19.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) இரவு அம்மனை அழைத்து செல்லுதலும் திருக்கதவு அடைத்தலும்

சடங்கு காலங்களில் தினமும் கோவலன் கதை படிப்பு இடம்பெறுவதுடன், மாலைச்சடங்கு பிற்பகல் 5.00 மணிக்கும் காலைச்சடங்குகள் அதிகாலை 3.30 க்ம் இடம்பெறும் . கதிரேசர் சடங்கு, கப்பல்காரர் சடங்கு மற்றும் பச்சைகட்டி சடங்குகளின் பின்னர் அம்மனின் கும்பம் ஊர் சுற்றுதல் இடம்பெறும்.

சடங்கு காலங்களில் பிரதம கட்டாடியார் ஆக திரு.த.மகேஸ்வரன் அவர்களும் உதவிக்கட்டாடியாராக திரு.த.தட்சனாமூர்த்தி அவர்களும்   அம்பாளின் பணியாற்றுவார்கள் என ஆரையம்பதி  கந்தசுவாமி, கண்ணகை மற்றும் வீரமா காளி அம்மன் ஆலயங்களில் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.