மூன்று மாதங்களில் மூவாயிரம் பஸ்கள் இறக்குமதி


பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் தொடர்பிலான விவாதம் தற்பொழுது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் அர்ஜூண ரணதுங்க எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கும் மூவாயிரம் பஸ் வண்டிகள் இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்திற்கான பஸ் வண்டிகளை இறக்குமதி செய்யப்படும் போது அது தொடர்பான தராதரங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி, செயற்கையான முறையில் பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார். இவரது இடத்திற்கு அமைச்சர் ராஜித்த சேனாரட்ன நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.