வெல்லாவெளி,மண்டூர் பிரதான வீதியில் உள்ள கோஸ்வே நெடுஞ்சாலை புனரமைப்பு(மண்டூர் ஷமி)

45 மில்லியன் செலவில் வெல்லாவெளி,மண்டூர் பிரதான வீதியில் உள்ள கோஸ்வே புனரமைப்பு

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்ட வெல்லாவெளி,மண்டூர் பிரதான வீதியில் உள்ள கோஸ்வே நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் 45 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இவ்வீதியானது படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கின்ற ஒரு பிரதான வீதி இந்த வீதியில் மூன்று பாலங்களும் இரண்டு கோஸ்வேகளும் உள்ளன பருவமழை காலத்தில் வெள்ள நீரினால் முற்றாக தடைப்படுவது வழக்கம்.இதனால் மக்களின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுவிடும்.மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சுமார் 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆறு மாதகாலப்பகுதியில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவடையும் என்றும் எதிர் வரும் காலங்களில் சிரமம் இன்றி மக்கள் போக்குரத்தில் ஈடுபடலாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.