தாக்குதல் விசாரணை; தூதுவர்களுக்கு பிரதமர் விளக்கம்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் ஆகியன குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு விளக்கமளித்தார்.

இச்சந்திப்பு நேற்று(24) மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியிலுள்ளவர்களுக்கு கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படுமென பாதுகாப்புத் தரப்பு சுட்டிக்காட்டியது.

மக்களின் இயல்பு வாழ்ககை வழமைக்குத் திரும்பியிருப்பதனால் வெளிநாடுகளில் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத்தடையை நீக்கிக்கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் வெ ளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ,பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் கலந்து கொண்டனர்.