மேட்டுவட்டையில் தானிய உற்பத்தி செய்வதற்காக இலவசமாக விதைகள் மற்றும் வேலிக்கம்பிகள் வழங்கிவைப்பு



மேதகு ஜனாதிபதி அவர்களால் முன்னெடுத்து வரும் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை கமநலசேவைக்குட்பட்ட மேட்டுவட்டை விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியை அறிமுகப்படுத்துவதற்காக விதைகள் மற்றும் வேலிக்கம்பிகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு விவசாயத்திணைக்களத்தின் இடைமாகாணம் விவசாய விரிவாக்கல் காரியாலயத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ராதிகா அவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தலைமையில் வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் தேசிய உணவு உற்பத்திக்கான வடகிழக்கு மாகாண இணைப்பாளர் கே.ஜே.செகமானசிங் கல்முனை வடக்குப் பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஜனாதிபதிச் செயலகத்தின் உதவிச் செயலாளர் சி.சி.கன்னங்கரா பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்