காத்தான்குடியை மையப்படுத்தி தனிக் கல்வி வலயம்! தமிழ் கல்வி வலயங்கள் புறக்கணிப்பு! வியாழேந்திரன் Mp

காத்தான்குடியை மையப்படுத்தி   தனிக் கல்வி வலயம்! தமிழ் கல்வி  வலயங்கள் புறக்கணிப்பு! என்ன நியாயம்? வியாழேந்திரன் Mp   

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து  கல்வி வலயங்கள் உண்டு . இதில் நான்கு கல்வி வலயங்கள் தமிழ் மாணவர்களை உளளடக்கியது. ஐந்தாவது கல்வி வலயம் மட்டக்களப்பு மத்தி வலயம். இது முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய வலயம். கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி , எங்கும் இல்லாதவாறு புவியியல் தொடர்பே இல்லாமல் முஸ்லிம் மாணவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட  தனிக்கல்வி வலயமாகும்.

எம்மைப் பார்த்து இனவாதிகள் எனச் சுட்டிக்காட்டும் முஸ்லிம்  அரசியல் வாதிகளின் இனவாத செயற்பாடே இது. ஏன் என்றால் முன்பு  கல்குடா, மட்டக்களப்பு கல்வி வலயங்களுடன் இணைந்திருந்த முஸ்லிம் பாடசாலைகளை தமிழர்கள் பாடசாலைகளிலிருந்து பிரியுங்கள் என்று நாம் கூறவில்லை .முதன் முதல் பிரித்தது முஸ்லிம் அரசியல் வாதிகளே!   தற்போது ஆளுநர்  நடத்தும் ஆசிரியர் இடமாற்றமும் இது போன்றுதான். பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் கோரவில்லை. ஆனால் இடமாற்றம் கோரியது முதலில்  முஸ்லிம் ஆசிரியர்களே! 

புவியியல் தொடர்பில்லாமல் கல்வி வலயத்தை உருவாக்கியது மாத்திரமல்ல , தற்போது காத்தான்குடிக்கு மாத்திரம் ஒரு தனிக்கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆளுநர் இறங்கியுள்ளார். ஏற்கனவே காத்தான்குடியிலுள்ள 22 பாடசாலைகளுடன் , இன்னும் எட்டு பாடசாலைகளை புதிதாக உருவாக்கி மொத்தம் 30 பாடசாலைகளுடன் இவ்வலயம் உருவாக்கப்படவுள்ளது.  புதிதாக உருவாக்கப்படவுள்ள பாடசாலைகளாக; 
1. கலாநிதி ஹிஸ்புல்லா வித்தியாலயம்
2. அல்-கிக்மா வித்தியாலயம்
3. மஹ்மூத் லெப்பே ஆலிம் வித்தியாலயம்
4. சேர் ராசீக் பாரீட் வித்தியாலயம்

5. காத்தான்குடி மீறாபள்ளி வித்தியாலயம்
6. ஜவாத் ஆலிம் வித்தியாலயம்
7. பூநொச்சிமுனை அஸ்மா வித்தியாலயம்
8. மனாறுல் ஹீதா புதிய வித்தியாலயம்.
 தனது ஆளுநர் பதவியை வைத்து தன் பகுதியை மையப்படுத்தி புதுக் கல்வி வலயத்தை உருவாக்குவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு முன்பு ஆளுநர் முழு மாகாணத்திற்குமானவர் என்ற அடிப்படையில் எமது வேண்டுகோள் இவைதான்

01. தற்போது 22பாடசாலைகளையும், சுமார் 7.5 சதுர கிலோமீற்றரும் கொண்ட காத்தான்குடிக்கு தனிக் கல்வி வலயம் என்றால் 83 பாடசாலைளையும்,  சுமார் 1600க்கும் மேற்பட்ட  சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்ட கல்குடா கல்வி வலயத்தினை எத்தனையாகப் பிரித்து தனிக்கல்வி வலயங்கள் உருவாக்குவது? நான்காகப் பிரிக்க வேண்டுமல்லவா? 
02. மட்டக்களப்பு கல்வி வலயம் 65 தமிழ் பாடசாலைகளையும், சுமார் 300 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டுள்ளது. இவ்வலயத்தில் மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டுமல்லவா? 
03. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 67 பாடசாலைகளையும், சுமார் 477சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்டது. இங்கு மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் அல்லவா?
04.   பட்டிருப்பு கல்வி வலயம் 69 பாடசாலைளையும்,    சுமார் 225க்கும் மேற்பட்ட சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்டது. இங்கு மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டுமல்லவா? 

ஆளுநர் என்பவர் காத்தான்குடிக்கு மட்டும் உரித்தானவர் அல்ல .   முழு கிழக்கு  மாகாணத்திற்கும் உரியவர். ஆகவே அவர் ஒரே நடைமுறையையே எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும் . இவ்வாறான நடவடிக்கைகளை பார்த்தும் நாம் கண்மூடி, வாய்பொத்திக் கொண்டு இருக்க முடியாது . எனக் கூறினார்.