தமிழ் மக்களின் அபிலாஷகளை நிறை வேற்றாவிட்டால் அவர்கள் தமிழ் சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள்;



தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ் மக்களால் வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதிகளாக்கப்பட்டனர். எனவே அவர்கள் தமிழ் மக்களின் அபிலாiஷகளை நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து மத்திய அரசாங்கத்தின் அபிலாஷகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அவர்கள் தமிழ் சமூகத்தில் இருந்து அநிநியப்படுத்தப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷட தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாக இரா. துரைரெட்ணம் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாhர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார் 

அரசுக்குரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் போது வறுமை , விகிதாசாரம், சனத்தொகை, காணியின் பரப்பளவு பார்க்கப்படவேண்டும் இவை பார்கப்பாததால் வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசம் இன்னும் வறுமையில் உள்ளது 

புதிய அரச நியமனத்தின் போதும் கிழக்கு மாகாணத்திலும் சரி மத்திய அரசிலும் சரி திறமையும். இன விகிதாராசாரம், பார்க்கப்படவேண்டும், புதிய பிரதேச செயலகமாக கல்முனை தமிழ், பிரதேச செயலகம் உருவாக்க வேண்டும், 

அதேவேளை முஸ்லீம்கள் தங்களுக்கான கல்வி வலயத்தை பிரித்துவிட்டார்கள் எனவே தமிழ் பாடசாலைகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய கல்வி வலயங்கள், புதிய உள்ளூராட்சி சபைகள் , புதிய அரச அலுவலகங்கள் உருவாக்கப்படவேண்டும். 

முப்படையினருக்கும், பொலிசாருக்கும் முகாம் அமைத்தல் தொடர்பாக இனிமேல் முஸ்லீம் கிராமங்களில் முகாம் அமைக்காமல் தமிழ் பகுதிகளில் முகாம் அமைப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்க கூடாது, அதேவேளை முப்படைக்கும் பொலிசாருக்கும் ஆட்களை திரட்டுவதில் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு மத்திய அரசு விகிதாசார ரீதியில் பொலிசாரை நியமிக்கவேண்டும்.

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லீம் ஆசிரியர்கள், தாம் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பொதுவான முடிவுகளை ஏற்று தனது கலாச்சாரத்தை பாதுகாக்கப்படவேண்டும் ..

அவ்வாறே தமிழ் பிரதேசங்களில் அரச நிர்வாகத்தில் வேலை செய்கின்ற முஸ்லீம்களுக்கு கலாச்சார விடயங்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் இந்து ,கிறிஸ்தவ, பௌத்த மதங்களுக்கு விசேட சலுகைகள் விங்கப்பட்டுள்ளனவா? 

காணிகள் வழங்குவது தொடர்பாக மற்றும் அமைச்சுக்களின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச, மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும்.

முஸ்லீம் அமைச்சர்கள் அரசுடன் இணைந்து கொண்டு அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு அப்பால் சென்று தங்களது இனத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன இதனால் கடந்த 20 வருடங்களாக பல தமிழ் பிரதேசங்கள் வறுமையில் தாண்டவமாடுகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமிக்கப்பட்டு 3 மாதங்களில் அவர் கிழக்கு மாகாண நிர்வாகத்தை கட்சி ரீதியாக பயன்படுத்தியுள்ளார் எனவே ஒரு இனம் கட்சிசார்பாக செயற்படுகின்ற கிழக்கு ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட்டு. நேர்மையான மூன்று இனங்களுக்கும் சேவை செய்யக்கூடிய சிரேஷ;ட அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமிக்கவேண்டும் .

அதேவேளையில் அமைச்சர் றிடாட் பதுர்டினுக்கு எதிரா பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது எனவே அந்தவகையில் தமிழ் பாராளுமன்ற பிரதி நிதிகள் ஒரு விடயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் . இந்த தமிழர்களால் வாக்களித்து தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளாக பிரதிநிதிக்கப்பட்டுள்ளீர்கள் எனவே அவர்கள் தமிழர்களின் அபிலாiஷகளையே நிறைவேற்ற வேண்டும் . மத்திய அரசாங்கத்தின் அபிலாஷகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அவர்கள் தமிழ் சமூகத்தில் இருந்து அநிநியப்படுத்தப்படுவார்கள் .

அதேவேளை அமைச்சர் றிசாட் பதூர்டீனின் விசாரணை தொடங்கப்படவேண்டும் விசாரணை செய்யப்படவேண்டும். அவர் குற்றவாளி என்றவுடன் அவர் பதவில் இருந்து இராஜனமா செய்யவேண்டும் .

எனவே ஜனாதிபதி , பிரதமதர் , மத்திய அரசாங்கம் கிழக்கில் மூன்று இனங்களும் ஜக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் இந்த விடயங்களில் இனியாவது தவற விடாமல் இதனை சீரமைத்து கிழக்கில் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு கிழக்கு மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு வழிசமைக்கவேண்டும். 

இவைகளை பாராமுகமாக இருந்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தங்களின் வாக்குப்பலம் ஊடாக தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என தங்களை தாங்களே நிரூபித்துக் காட்டுவார்கள் என்றார்.