அன்னமலை ஸ்ரீ சித்திவிநாயகர் மகா கும்பாபிஷேக பெருவிழா


ஸ்ரீ தெட்சிணகைலாயம் எனப்போற்றப்படும் பஞ்ச ஈச்சர சிவதலங்களை தன்னகத்தே கொண்டதும் இந்து மகா சமுத்திரத்தின் முத்தாக மிளிர்வதுமான இயற்கை எளிழ் மிகு இவ் இலங்காபுரியின் கிழக்குக் கரையின் மட்டு

வாவிக்கரையோரம் எழில் கொஞ்சும் சைவமும் தமிழும் தழைத்தோங்குவதுமான அன்னமலை பதி அமைந்து வேண்டுவோருக்கு வேண்டுவன பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும் ஏனைய பரிபாலன மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசித்திங்கள் 31ம்நாள் (14-06-2019)
வெள்ளிக்கிழமை துவாதசி திதியும் சித்த யோகமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய காலை 07.40 மணி முதல் 08.15 மணிவரையுள்ள மிதுன லக்ன சுபவேளையில் மகாகும்பாபிஷேசம் நடைபெற உள்ளதோடு  அதற்கு முன்பின் நடைபெறும் கிரியா காலங்களிலும் ஐங்கரனின் அடியவர்கள் ஆலயத்துக்கு வருகைதந்து எம்பெருமானின் பேரருட்கடாட்சத்தைப் பெற அடியவர்களை அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்.

ஆலய கிரியாகால நிகழ்வுகள்
எண்ணெய்காப்பு 13.06.2019 வியாழக்கிழமை காலை 06.00 மணி முதல் மாலை 5.00மணிவரைக்கும்.

கும்பாபாபிஷேகம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 07.40 மணி முதல் 08.15 மணிவரையுள்ள சுபவேளையில்.

15.06.2019 திகதிமுதல் 08.07.2019 வரைக்கும் மண்டலாபிஷேகம் இம்பெறும்.

சங்காபிஷேம் 09.07.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகம் இடம்பெறும்.