மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வு 2019

"நிலையான காடு முகாமைத்துவத்தின் மூலம் வளிமண்டலம் அசுத்தமடைதலை குறைத்தல்" எனும் தொனிப்பொருளின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துடன்  மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபை  இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு மட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், உதவிப் பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர், பட்டிருப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர்,  பாடசாலை அதிபர்,  பிரதேச செயலக ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள்ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் , அலுவலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது சுழல் பாதுகாப்பு தொடர்பான போட்டி நிகழ்சிகள், கண்காட்சி மற்றும் பாடசாலை மாணவர்களால்  சுழல் பாதுகாப்பு தொடர்பில் நடாத்தப்பட்ட  போட்டியில்  வரையப்பட்ட ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 

பாடசாலை வளாகத்தில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக் கன்றுகளும் நடப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.