விசாரணைகளுக்காக அசாத் சாலிக்கு அழைப்புஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக விசாரணைகளுக்காக, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையின் பிரதிநிதி ஆகியோரும் இன்று சாட்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தல், அழுத்தங்களுக்கு அடிபணியாது தொடர்ந்து முன்னெடுக்குமாறு, பிரதான சிவில் அமைப்புகளின் பிரதானிகள் சிலர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.