சாட்சி வழங்குவதற்காக அசாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜர்


மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சி வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார். 

இன்று (11) பிரதான மூன்று சாட்சியாளர்கள் ஆஜராக உள்ளதுடன் அவர்களில் முதலாவதாக அசாத் சாலி ஆஜராகியுள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த அசாத் சாலி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பில் 1884 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். 

அத்துடன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பில் 5 பாதுகாப்பு செயலாளர்களிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.