Australian Aid நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு




மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த 06 வருட காலமாக இளைஞர் மற்றும் யுவதிகளின் எதிர்கால தொழில் சவால்களுக்கு ஏற்ற வகையில் தொழிற்சந்தையில் சவால் மிக்க பல தொழிற்பயிற்சிகளை வழங்குவதில் முன்னனியாக திகழும் EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கடந்த 06 மாத காலப்பகுதிகளில்Australian Aid யுனை நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் Ruwan Rekha நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தபட்ட அழகுகலை நிபுணர் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவமானது 31.05.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மன்ரேசா வீதியில் அமைந்துள்ள EREED Oதொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஓன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய திரு.த.மயூரன் தலைமையில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரவ திரு. பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக  Australian Aid  நிறுவனத்தின் இந் நிகழ்ச்சி திட்டத்தை அமுல்படுத்தி வரும் RuwanRekha  நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்களாகிய சுமேத டி சில்வா , குருநாதன் பிரபாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி அருணாளினி மற்றும் சத்துருகொண்டான் பிரதேச கிராம சேவையாளர் ம.மன்மதன் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று அதிகாரி பிரேமகுமார் ஆகியோரும் மேலும் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சமாக EREEDO  தொழிற்பயிற்சி நிறுவனம் மூலமாக தொழிற்பயிற்சிகளை  நிறைவு செய்து தற்போது அதே துறையில் தொழில்களை மேற்கொள்ளும் மாணவர்கள் அடுத்த சந்ததியினருக்கு பயிற்சிநெறி மூலமாக பெற்ற நன்மைகள், அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தினை பயனுள்ள வகையில் வடிவமைத்தமை போன்ற வழிகாட்டல் ரீதியான முக்கிய விடயங்களை அனுபவ பகிர்வுகளாக பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் பயிற்சிநெறிகளை நிறைவு செய்த மாணவர்களின் மேலதிக படிப்பினை தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற நிறுவனங்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.