சமகால அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை சர்வதேசம் பாராட்டியுள்ளது


சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சமகால அரசாங்கம் முன்வைத்த சமூக, வர்த்தக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 2025 வளமிக்க நாடு என்ற திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், துரித கிராம அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கும் கம்பெரலிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் பாராட்டு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காப்புறுதி தொழிற்துறையை முறையாக முன்னெடுத்துலுக்கான சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் மற்றும் கலால் கட்டளைச் சட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்த விவாதத்தின் போது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதாரம் தொடர்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் உலகில் உள்ள வல்லமை மிக்க மற்றும் உன்னதமான தொழிற்துறை சர்வதேச நிறுவன நாடுகள் செல்வம் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் விபரித்தார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, அமெரிக்காவின் வெளிநாட்டு நிதி உதவி அமைப்பு, ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக அபிவிருத்திக்காக எமது நாட்டுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் கூறினார். இதற்கு காரணம் இங்கு நான் குறிப்பிட்ட எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களேயாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களில் 1200 மில்லயன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகை சர்வதேச நிதி உதவியாக எமக்கு கிடைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் உலக வங்கி கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் நிதி உதவியாக வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக 152 மில்லயன் அமெரிக்க டொலர்கள் அபிவிருத்தி திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மே மாதத்தில் 164 அமெரிக்க டொலர்களையும் அமெரிக்க மிலேனியம் செலேன்ஜ் எக்கவுண்ட் கீழ் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்த வாரத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி நுண் மற்றும் மத்திய அளவிலான தொழிற்துறை கடனுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி கொழும்பு நகர புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மண்சரிவுகளை கட்டுப்படுத்துவதற்காக 280 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக இந்த வங்கி 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிசக்தி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்திற்காக மேலதிகமாக 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

இந்த அனைத்து சர்வதேச ஒத்துழைப்பும் நிதி உதவியும் எமக்கு கிடைத்தமை தனிப்பட்ட நட்புறவினால் அல்ல எமது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பில் உள்ள தெளிவே காரணமாகும். பொருளாதார தரவை அடிப்படையாக கொண்டு மாத்திரம் நாட்டின் அபிவிருத்தியை அடைய முடியாது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது பொது மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுதல், ஏற்றுமதி தொழிற்துறையை ஊக்குவித்தல, கல்வி மற்றும் சுகாதார போன்ற சேமநல பணிகளை வலுவூட்டுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் போன்ற மனித வள அபிவிருத்தி கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு அபிவிருத்தியை நோக்கிய நாடுகளே அபிவிருத்தியை அடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.