இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கிடையில் ஒற்றுமை வேண்டி காத்தான்குடி மக்கள் விஷேட நோன்பு நோற்பு



(எம்.பஹ்த் ஜுனைட்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கிடையிலும் சமாதானம் வேண்டியும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர் நோக்கியுள்ள நெருக்கடி நீக்குவதற்காகவும் இறைவனிடம் வேண்டி காத்தான்குடி மக்கள் விஷேட நோன்பு நோற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்..

விஷேட நோன்பு நோற்றவர்களுக்காக காத்தான்குடி நகரசபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்த து ஆ பிரார்த்தனை மற்றும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை (17) காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது..

இவ் விஷேட நிகழ்வில் நகர சபை தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.