ஊர்காவல் படையனரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்



--கனகராசா சரவணன்
தமிழர்களது உரிமைக்காக நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக ஐ.தே.கவுடன் பேசி ஏன் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடாது. அமைச்சுப் பதவியினைப் பெற்று சேவையாற்றுவதன் ஊடாக மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் என். விஸ்னுகாந்தன' கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் என். விஸ்னுகாந்தனின் ஊடக சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் உல்லாச விடுதியில் நடைபெற்றது. இவ் ஊடாக சந்திப்பிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

இதில், கட்சியின் உறுப்பினரான வாழைச்சேனையைச் சேர்ந்த கே.உமாபதி, முல்லைத்த்Pவு பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.யோன்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர்களது உரிமைக்காக நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக ஐ.தே.கவுடன் பேசி ஏன் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடாது. அமைச்சுப் பதவியினைப் பெற்று சேவையாற்றுவதன் ஊடாக மக்களுக்குச் சேவையாற்ற முடியும். இதற்கு எங்களது கட்சி மாத்திரமல்ல, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாமைக்குக் காரணம் என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம், தலைவர் மாவை சேனாதிராசா அண்ணன் போன்றோர் முஸ்லிம்களை வெறுத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கிறார்கள்.

யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது இந்த யுத்தத்தை நிறுத்துவோம் என முஸ்லீம் தலைவர்கள் ஒரு வார்த்தை கூடப் போசவில்லை. அவர்கள் தமிழர்கள் அழிந்து போகட்டும் என்றிருந்தார்கள். அவர்களை வெறுப்பதற்கு ஏன் கவலைப்பட வேண்டும். 

தற்கொலைத் தாக்குதலையடுத்து உருவான குழப்பமான சூழலையடுத்து அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவிகளில் இருந்து விலகினார்கள். அந்த வேளையில் இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனார்கள். என்று சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் என்று பேச்சுக்கள் வந்த போதிலும் அது உண்மையான காரியம் அல்ல ஏனென்றால் இவர்கள் ஒரு இமைப்பொழுதில் பதவிகளிலிருந்து விலகிக்கொண்;டார்கள்.

நாங்கள் நினைப்பது போலல்ல. கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்துக்கும்; தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மிடையில் யுத்தம் நடைபெற்ற போது அனேகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது இன்றிருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் கண்மூடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக இருந்ததற்குக் காரணம். இலங்கை தேசத்தின் 3வது இனமாக இருக்கின்ற படியினால், இரண்டாவது இடத்துக்கு வரவேண்டும் என்ற காரணத்தினால்.

1990 களில் ஐ.தே.க யுடன் சேர்ந்து மக்களைப் பாதுகாக்க என்ற வார்த்தைகளைக் கூறி ஒத்துழைப்புத் தருகிறோம் என்று கூறி, இது போன்று என்னென்ன காரியங்களை பிரேமதாசவிடம் தெரியப்படுத்தினார்களோ தெரியாது. அவர்கள் ஆயுதங்களை வழங்க ஊர்காவல் படையை அமைத்தார்கள்.

அக்காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஊர்காவல் படையாலர் கொல்லப்பட்டார்கள். 1990 க்குப்பிற்பாடு கூட தமிழர்கள் கொல்லப்பட்டு. சொத்துக்கள், உடமைகள் அழிக்கப்பட்டது. கடந்த 1997 இறுதியில் கூட ஒரு ஊர்காவல் படை வீரரை ஓட்டமாவடியில் புலிகள் கொன்றதற்காக 11 தமிழர்களை வெட்டி எரித்துப் போட்டார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற படுகொலைகளுக்கு பொலிசில் முறைப்பாடுகளையும் செய்யமுடியாத நிலை இருந்தது. ஏன் இன்று கூட பாகிஸ்தான் ஐ.எஸ் .அமைப்புக்களுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 13.6 வீதமானவர்கள் இருக்கிறார்கள் என தெரியப்படுத் தியிருந்தார்கள்.

தமிழர்களை அழிப்பதில் உறுதியாக இருந்தார்கள், காட்டிக் கொடுத்தார்கள். துரோகத்தனங்களைச் செய்தார்கள். சிங்கள அரசு முஸ்லிம்களை 100க் 100 வீதம் நம்பியிருந்தார்கள். ஆனால் நாங்கள் சிங்கள அரசுக்கு, ஏனைய திணைக்களங்களுக்குத் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்

தௌபீக் ஜமாத் ஊடாக பாக்கிஸ்தானிலிருந்து வருகிறார்கள். தங்களது மதக்கல்வியைப் படிப்பிப்பதற்கு பரப்புவதற்கு ஆன படியினால் அது அல்ல, ஆயுதங்கள் தயாரிக்கிறார்களா,? இங்கிருக்கிற முஸ்லிம்களின் மனங்களை மாற்றி மாற்று வழிகளுக்குக் கொண்டு செல்கிறார்களா? என்று தெரியாது ஆன படியினால் அவர்களை வர விடவேண்டாம் என்று தேசிய புலனாய்வு பிரிவிக்கு இவற்றை பற்றி பல தடவைகள் தெரிவித்திருந்தோம் அதற்குப் பிற்பாடுதான் இந்த தாக்குதல் நடந்தது. என்றார்