அடிப்படைவாத அரசியல் குழுக்கள் இனவாதத்தை தூண்ட முயற்சி


ஏதாவது ஓர் இனம் அடிப்படைவாதமாக செயற்பட்டால், அந்த இனமே பாதிப்புக்குள்ளாகும். அப்படி நடந்தால் அதன் விளைவை அனைவரும் பொதுவாக முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அடிப்படைவாத அரசியல் குழுக்கள் இனவாதம், மதவாதத்தை தூண்டி தம்மிடமிருந்து இல்லாமல் போன அரசியல் அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகின்றன. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் 23.78 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். ஒரே நாடாக நாம் முன்னேற வேண்டுமாயின் இன,மத பேதமாக பிரிந்து செயற்படுவதை விடுத்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வரலாற்றிலிருந்து இலங்கையர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தவர்களாகும் என்றார்.