வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்புஇந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1137 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள அதிகூடிய ஏற்றுமதி வருமானம் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிகளின் அதிகரிப்புக்காக கைத்தொழில் மற்றும் கனிம ஏற்றுமதிகளின் உயர் செயற்றிறனே காரணம் என, மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.