உயிர்த்த ஞாயிறு தாக்குதல்;அடுத்த வாரம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகொண்டமைக்காக சவூதியில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ஐந்து பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது.

அவர்களிடம் இருந்து முக்கியமான – அதிர்ச்சித் தகவல்கள் பல கிடைத்துள்ளன. அவர்களின் தொடர்பாடல் சாதனங்களும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் முக்கியமான பல விடயங்கள் அடுத்த வாரம் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளன என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைமையுடன் அல்லது தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்த தரப்புடன் தொடர்பில் இருந்த இலங்கையர் யார்? என்ற விவரங்கள் குறித்துத் தற்போது துப்பு துலக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.