பாசிக்குடாவில் கட்டாக்கலி மாடுகள் தொல்லை





-மு.கோகிலன்-

பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்ள பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

காலை வேளையில் சுற்றுலா வலையத்திற்குள் உள் நுழையும் கால்நடைகள் மாலை நேரமாகியும் அங்கேயே தரித்து நிற்கின்றன எனவும் அவற்றின் உரிமையாளர் ஒரு சிலரை தவீர ஏனையோர் அவற்றினை தங்களது இடத்திற்கு எடுத்துச் செல்லாது உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவற்றின் நடவடிக்கைகளால் உல்லாசப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேற்படி விடயம் தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபையின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடு;ப்பதில் தாமல் தெரிவித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இப்பிரதேசத்திற்குள் வந்த மாடு ஒன்று நோய் காரணமாக இறந்துள்ளது. அதனை பிரதேச சபை ஊழியர் அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டினர்.

கடந்த மாதங்களில் 2 மாடுகள் இவ் பிரதேசத்தில் இறந்துள்ளதாகவும் அவற்றின் துர்நாற்றம் காரணமாக உல்லாசப் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.