இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லைஜனாதிபதியின் அதிரடி தீர்மானத்தால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தினால் மாத்திரமே, அமைச்சரவையை கூட்டுவதாக ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி, இன்று தெரிவுக்குழு அமர்வு இடம்பெறுவதனால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.