புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தரம் 05 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு


மண்முனைப் பற்று பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம், தாழங்குடா விநாயகர் வித்தியாலயம், தாழங்குடா றோ.க.த பாடசாலை, மாவிலங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவருக்கான விசேட கருத்தரங்கு 16-07-2019 செவ்வாய்க்கிழமையன்று புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) நிதி அனுசரணையில் நடைபெற்ற இக் கருத்தரங்கை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) அமுல்படுத்தியது. நூற்று ஐம்பதிற்கு (150) மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்ட இக்கருத்தரங்கிற்கு EDS இன் ஆரம்பப்பிரிவு வளவாளர் திரு J.I.ஞானரெத்தினம் பிரதான வளவாளராக கடமையாற்றினார். இவருடன் சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர் T.நாகநாதன் அவர்களும் வளவாளராக பங்குபற்றினார்.

கடந்த வருடம் முதல் புதுக்குடியிருப்பில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் நடாத்தப்பட்டு வரும் வகுப்பு தொடர்பாக பெற்றார்கள் நன்றி தெரிவித்தனர். எதிர்வரும் காலத்திலும் இவ்வாறான வகுப்புக்களை தொடர்ந்து நடாத்த நிதி வழங்குனர்கள் ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.