மட்டக்களப்பு நகரில் பிரபல்யமான உணவகமொன்றில் தீ விபத்து



(சிஹாராலத்தீப்)


மட்டக்களப்பு நகரில் செயல்பட்டு வந்த பிரபல்யமான உணவகமொன்றில் (கே.எப்.சி).ஏற்பட்ட தீயினை பொலிஸ் , ராணுவம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினரும் இணைத்து சுமார் ஒரு மணி நேரத்தில்முழுமையாக அணைத்து பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

நேற்று  முற்பகல் 11 மணியளவில் ஏற்பட இந்த தீ விபத்தில் குறித்த உணவகத்தின் புறம்பான பகுதியிலிருக்கும் களஞ்சியப்படுத்த பட்டிருந்த பெருமளவு காட்வோட்கள் எரிந்துள்ளதாகவும் இத்தீவிபத்தில் எவ்வித உயிர்சேதமோ பெருத்த பொருள் சேதமோ ஏற்படவில்லையென பாதுகாப்பு வட்டார தகவல் தெரிவித்தது

சம்பவ இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் தம்மிக்க தயானந்தாவின் அறிவுறுத்தலில் மட்டக்களப்பு பிரிவு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமார ஸ்ரீ, மட்டக்களப்பு தலைமைப்பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எம்.டீ.தீ ஹகவத்துற ஆகியோர் ஸ்தலத்துக்கு விரைந்து வந்து தீயை முற்றாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஏனைய விசாரணையிலும் ஈடுபாடு காட்டினார்.

இச்சம்பவத்தில் தீப்பிடித்தது பற்றி அறியமுடியாதிருப்பதாகவும் மின்சார சபையின் அறிக்கை கிடைத்ததும் காரணத்தை அறியமுடியுமென்றும் இதுபற்றி மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டார தகவல் மேலும் தெரிவிக்கின்றது.