கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் மட்டு மாவட்டம் முதலிடம்.



(பா.மோகனதாஸ்)


கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டி, அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அண்மையில் (07) இடம்பெற்றபோது மட்டு மாவட்டம் முதல் நிலையினை சுவீகரித்துள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான இந்நிகழ்வில் ஆக்கம் எழுதுதல், கட்டுரை வரைதல், இலக்கியம் நயத்தல், இலக்கணப் போட்டி, குறுநாட ஆக்கம், கவிதை ஆக்கம், பேச்சு, தனிநடனம், பாவோதல், தமிழறிவு வினா விடை, தனி இசை, நாட்டார் பாடல், இலக்கிய நாடகம், குழு இசை, வாசிப்பு, நாட்டிய நாடகம் உட்பட பல்வேறு போட்டிகளில் போட்டியிட்டு மட்டு மாவட்டம் முதல் இடத்தினை தனதாக்கி சாதனை படைத்துள்ளது.

இதற்கிணங்க மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் முறையே 23,17 மற்றும் 10 முதல் நிலைகளை பெற்று முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது.

போட்டியில் வெற்றியீட்டிய மட்டு மாவட்ட வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆளுனரால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்படதுடன் மட்டு கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஆளுனரிடமிருந்து வெற்றிக் கேடயங்களை பெற்று கெளரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.