கிழக்க மாகாண தமிழ் மொழித் தினப் போட்டியில் தும்பங்கேணி மாணவி சாதனை

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கோட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமே தும்பங்கேணிக் கிரமமாகும். இக் கிராமத்தில் மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி மகா வித்தியாலயம் பல சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணத் தமிழ் மொழித்தினப் போட்டியில் தரம் 11 இல் கல்வி பயிலும் செல்வி பு.கிஷாந்தி, பாவோதல் நான்காம் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று தான் கற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைக்கும், அக் கிராமத்திற்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் பெருமைசேர்த்துக் கொடுத்துள்ளார்.
இவர் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வகையில் இவரின் இவ்வெற்றிக்காக உழைத்த ஆசிரியைகளான திருமதி. ஜனனி – கிரிதர், செல்வி. மு.தவமணி அவர்களுக்கும் பதில் அதிபர் மு.அருந்தவகுமார், மற்றும் முன்னாள் அதிபர் திரு.வே.யோகேஸ்வரன் அவர்களையும் கல்விச் சமூகம் பாராட்டி நிற்கின்றது.