தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தினால் விரைவில் வழங்கப்பட வேண்டும்



(டினேஸ்)

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு நேற்று  11 ஆம் திகதி சபை முதல்வர் 
ரீ. சரவணபவான் தலைமையில் நடைபெற்றது அந்தவகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சார்பில் இன்றைய தினம் ரீ.சரவணபவன் முன்னிலையில் மாநகரசபை உறுப்பினராக பதவிப்பிரமானம் பெற்றதன் பின்னார் பிரத்தியேக ஊடக சந்திப்பின் போதே வடிவேல் குபேரன் 
இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

இன்று நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் கடந்த 10 வருடங்களாக இளைஞர் அணி தலைவராக கடமை செய்துவருகின்றேன் அதனடிப்படையில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி ஜயா அவர்களின் வேண்டுகோளுக்கும் கட்சியின் உயர்மட்ட பீடத்தினால் எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினராக மாநகர முதல்வர் ரீ.சரவணபவன் முன்னிலையில் பதவியேற்றுள்ளேன் அந்தவகையில் எனது செயற்பாடுகளாக மக்கள் மத்தியில் உள்ள பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் சக காலத்தில் நிலவும் விடயங்கள் சம்மந்தமாகவும் நான் எனது சேவைகளை தொடரவுள்ளேன்.

அத்துடன் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தினால் விரைவில் வழங்கி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களது மனநிலை மிக மோசமான நிலையில் உள்ளது ஆகையினால் குடும்பத்தாருக்கு மனநிலைகளை மாற்றுவதற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தீர்மானங்கள் எடுத்துள்ளேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வடிவேல் குபேரன் 
(பிரதீபன்) கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.