காணியமைச்சினால் நிரந்தரகாணியில்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான காணிக்கச்சேரி மட்டக்களப்பில்




(வரதன்)

காணியமைச்சினால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனையின் கீழ் 10 இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் திட்டத்தின் கிழ் 2017 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தரகாணியில்லாமல் விண்ணப்பித்த 200 பயனாளிகளுக்கான காணிக்கச்சேரி  காணிசீர்திருத்த ஆணைக் குழக்களினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணிசீர்திருத்த ஆணைக்குழவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காணியமைச்சின் பிரதம பணிப்பாளர் எஸ்.பத்மசிறி கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தரகாணியில்லாதவர்களுக்கு நேர்முகப்பரீட்சை இங்கு இடம்பெற்றது.

இதில் தெரிவு செய்யப்படும் பயனாளிக்கு அரசாங்கத்தினால் 75வீதம் வரை மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.மாவட்டத்தில் நடுத்தரவர்க்க மக்களின் இருப்பிட பிரச்சனைக்கு ஓரு நிரந்தர தீர்வு வழங்கவே அரசாங்கத்தினால் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் கருத்து தெரிவித்தார்.

இவ் நிகழ்விற்கு காணியமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் காணிப்பிரிக்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எ.முகுந்தன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் மாவட்ட அரச உயர் அதிகாரிகள் பொது மக்கள் எனப்பலரும் இவ் காணிக்கச்சேரியில் கலந்து கொண்டனர்.