கல்வியல் கல்லூரிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் புதிய மாணவர்கள்



தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்பொழுது பூர்த்தி அடைந்திருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும் இந்த கற்கை நெறிகளுக்காக இம்முறை 8000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 

இவர்கள் 2 குழுக்களாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். 2016 - 2017 ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் சித்தி ஏய்திய மாணவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 68 000 பேர் இதற்கென விண்ணப்பித்திருந்தன. இவர்களுள் 28 000 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தன. 134 மண்டபவங்களில் இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. இம்முறையே ஆகக் கூடுதலானோர் இந்த கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.