நாவிதன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சக்தி விழா



(கு.கிலசன்)

கல்முனை நகரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள நாவிதன்வெளியில் பன்னெடுங்காலமாக வீற்றிருந்து அடியார்க்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா கடந்த ஜூலை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

திங்கள் (8) அதிகாலை திருக்கதவு திறத்தலும் 9ம் திகதி அலங்கார பூசையும் நாவிதன்வெளி கிராமத்துக்கான அம்மன் ஊர்வலமும் 10ம் திகதி அலங்கார பூசையும் அன்னமலை கிராமத்துக்கான அம்மன் ஊர்வலமும் 11ம் திகதி அலங்கார பூசையும் சவளக்கடை மற்றும் முதியோர் வீட்டுத் திட்டத்துக்கான அம்மன் ஊர்வலமும் 12ம் திகதி கற்பூரத் திருவிழாவும் 13ம் திகதி 7ம் கிராமத்தில் குளிர்த்திக்கால் வெட்டுதலும் அம்மன் ஊர்வலமும் இடம்பெற்றது.

14ம் திகதி இன்று காலை 10 மணிக்கு நாவிதன்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அடியார்களின் பாற்குட பவனியும் இரவு அன்னமலை வரையிலான முத்துச்சப்பரப்பவனியும் இடம்பெறவுள்ளது. நாளை திங்கட்கிழமை (15) தீ மூட்டுதல் காத்தானை கழுவில் வைத்தல் அம்மன் தவநிலை ஆகியனவும் இடம்பெற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ மிதித்தலுடன் சக்தி விழா 2019 இனிதே நிறைவுறவுள்ளது. தினமும் பூசை ஆராதனைகளில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.