அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ருபா செலவில் குடி நீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் முன்னெடுப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியையடுத்து தற்போது மக்களின் குடி நீர் பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ருபா செலவில் குடிநீர் கிணறுகள் அமைத்து கொடுக்கவும் மற்றும் குடிநீர் தாங்கிகள் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு குடிநீர் பவுசர்கள் மற்றும் டைக்டர்கள் முலம் பிரதேச சபைகள் நகரசபைகள் பிரதேச செயலகங்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சபைகளின் ஊடாகவும் குடி நீர் வழங்க நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும் தற்போது உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் குறைவடைந் துள்ளதாகவும் இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாகவும்

இப் பிரச்சனையை முற்றக நிரந்தரமாக தீர்க்க எதிர் காலத்தில் கித்துல் உறுகாமம் குளங்களை இனைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் மக்களின் இவ் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அணைவரும் ஒற்றுமையுடன் செயற்ப்பட முன்வரவேண்டுமென இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.